எங்கள் கவிதாலயா இசைப் பள்ளியின் தலைப்புப் பாடல்...
பல்லவி
ஆலயம் ...
இது ஆலயம்...
எங்கள் ஆலயம்...
கவிதாலயம்..!(ஆலயம்)
அனு பல்லவி
இது கலைகளின்
சங்கம தேவாலயம்...
பல நிலையிலும்
உதவிடும் ஜீவாலயம்..!
மலை மகளும் ...
கலை மகளும் ...
அருள் புரியும் ...
எங்கள் ஆலயம்..!(மலை மகளும்)
ஆலயம் ...
இது ஆலயம்...
எங்கள் ஆலயம்...
கவிதாலயம்..!
சரணம்
மனித நேயம் ஒன்றே...
உயிரின் கொள்கையாகும் இங்கே...
நீதி நேர்மை நியாயம்...
எங்கள் தாரக மந்திரம்...(மனித நேயம்)
வாழ்வறியா ஏழைகள்கும்...
படிக்கும் நல்ல மாணவர்க்கும்...(வாழ்வறியா)
விடி வெள்ளியாய்...
ஒளி வீசும் ஏழைகள்
உங்களின் ஆலயம்...(விடி வெள்ளியாய்)
ஆலயம் ...
இது ஆலயம்...
எங்கள் ஆலயம்...
கவிதாலயம்..!(ஆலயம்)