Sunday, August 31, 2014

2007-ஆம் ஆண்டு என் அக்காவிற்கு திருமணம் நடைபெற்ற போது  நண்பர்களுக்காக எழுதிய அழைப்பிதழ்


நலம் கொடுக்கும்
நட்பே..!

இதோ..!
இந்த சுவடி
என் அழைப்புகளையும்
என் அக்கா
கவிதாவின் கனவுகளையும்
சுமந்து வந்து
உங்கள் கைகளில் தவழ்கிறது...

இவள்
எதிர்கால
வெளிச்சத்திற்கு ஒரு
விடியலாகவும்...

இந்த
வீணையை மீட்டுவதற்குரிய
விரல்களாகவும்...

இவள்
கனவுகளின்
கோட்டைக்கு
ஒரு மன்னனாகவும்...

இந்த பவானியின்
சீதையை மணக்க
வில்லொடிக்க வருகிறார்...

இந்த குருசையின் 
 நந்த  குமார்

இந்த
இரு கூட்டு பறவைகளை-இன்று
ஒரு கூட்டு பறவைகளாக்க...
இரு வெவ்வேறு கனவுகளை-இன்று
ஒரு ஜோடி கனவுகளாக்க...

உங்கள் நடராஜன்

மடல் தூவி அழைக்கின்றேன்-நீங்கள்
மலர் தூவ வாருங்கள்
மலரட்டும் புது வசந்தமென
மனம் பொங்க வாழ்த்துங்கள்

                                                                                             என்றும் அன்புடன்
                                                                                              உங்கள் நடராஜன் 


                                                              மணமகன் L.நந்தகுமார் B.A.
                                                              மணமகள் K.கவிதா  B.A.

  

                                மனங்கள் கூடும் நாள்   :5.03.2007
                                மாலை சூடும் நேரம்       :காலை 6.00 to 7.30
                                மலர் தூவும் மேடை        :செங்குந்தர் சமுதாய கூடம்,
                                                                                    குருசாமி பாளையம்.