Thursday, August 7, 2014

2006-ஆம் ஆண்டு ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி வெள்ளி விழா நிகழ்ச்சியில்  கவிஞர் பா.விஜய் சிறப்பு விருந்தினராக தலைமையேற்ற மாநில அளவிலான இளமை திருவிழாவில் 37 கல்லூரிகள் கலந்து கொண்ட கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை...

                                               


                                                 தீய்ந்து போ தீவிரவாதமே..!

தீவிரவாதமே..!

நீ...
கற்றுக் கொண்டதும்
நீ...
பெற்றுக் கொண்டதும் என்ன..!

நீ...
உணர்ந்து கொண்டதும்
நீ...
உணர்த்துவதும் எதை..!

சாதாரண கைத் துப்பாக்கி

சலித்துப் போன 9 எம்.எம்.
சல்லடையாக்கும் 410 மஸ்கட்

சொன்ன பிறகு அடிக்கும் 303 ரை ஃ பிள்
சொல்லாமல் அடிக்கும் ஏ.கே.47.

இப்படி ...
ஆயுதங்களின் பரிணாமங்கள்
மாறும் போதும்
அவற்றின் வலிமை-சற்று
கூடும் போதும்


உன் வீரத்திற்கும்
உயர்ந்த  சில
விருதுகள்
கிடைக்கலாம்...

நீ
நடந்து
வரும்பொழுது -உன் பாதத்தின்
வலிமையில் இந்த பூமி
ஓரங்குலம்
உயரம் குறையலாம்..!

நீ
சுழற்றுகின்ற வாளின்
சுழற்சியில் இந்த பூமியின்
சுற்றுவட்டப் பாதையும்
சிறிது வெட்டி எறியப்படலாம்...

உன்
அம்பறாதூளியின்
அம்புக்கு
இந்த
வில் மட்டுமல்ல-அந்த
இமயமும்
சிறிது வளைந்து கொடுக்கலாம்..!

ஆனால்..!
பதினான்கு வருட
வனவாசத்திற்கு பிறகு
அரியாசனம் ஏறும் பொறுமை
இருக்கிறதா-உன்
தீவிரவாதத்திற்கு..!

தென்றலில் தவழ்ந்து
பூக்களை நுகர்ந்து
இசைமணம் பரப்பும்
ஆனந்த லிபிகளின்
மென்மை தெரியுமா-உன்
தீவிரவாத்திற்கு..!

புறாவின்
குஞ்சுகளுக்கு
அதன் சிறகுக்குள் கிடைக்கும்
அன்பான பாதுகாப்பு
கிடைக்குமா-உன்
தீவிரவாதத்திடம்..!

அடுத்தவனுக்கு
குழி பறிக்காமல்
உனக்கு அஸ்திவாரம்
தோண்ட முடியுமா-உன்
தீவிரவாதத்தால்..!

முடியுமென்றால் சொல்லுங்கள்!

எங்கள்
பேனாக்களின் சபைகளில் ..!
உங்கள்
கத்திகளுக்கும் சிறிது
இடமளிக்கிறோம்..!

No comments: