காமம்..!
உன்
உடல் எனதாகும்..!
என்
உடல் உனதாகும்..!
நம்
இருவுடல் அணுக்கள்
இறுக்கிப் பிழிந்த
வியர்வை இடத்தில்-நம்
எண்ணம் இரண்டும்
ஒன்றாய் இணையும்...
இணைந்த கணத்தில்
கரைந்து தேயும்..!
தேய்ந்து மறைந்த
வெற்றிட வெளியில்
நம்முடல் இரண்டும்
ஒன்றாய் மிதக்கும்..!
நீயென்பது நீயேயல்ல
நானென்பது நானேயல்ல
நான்
தீண்டுவதெல்லாம் எனதாக நீயும்
நீ தீண்டுவதெல்லாம் உனதாக
நானுமிருக்கிறோம்..!
உனதும் எனதும்
எனக்கும் உனக்கும்
பொதுவேயென்ரால்...
இவ்விருவுடலென்பது
ஒருவுடலேயாகும்..!
ஒருவுடலானால்-நம்
வலியும் சுகமும்
ஒன்றேயாகும்..!
நீ என்னுள்ளும்
நான் உன்னுள்ளும்
கரைந்த பிறகு
காமம் என்பதே-ஒரு
கலையாய் ஆகும்..!
கலையாய் ஆன
காமம் நம்மை-நம்
இறப்பில் கூட
ஒன்றாய் சேர்க்கும்..!
தவப்பலனே பேரின்பமென்றால்-நம்
காமம் என்பதும் ஒரு தவமேயாகும்..!
No comments:
Post a Comment