Saturday, July 26, 2014

25.06.2005 சனிக்கிழமை அதிகாலை 1.30-க்கு எழுதியது...

                                      மின்சார காதல்...(ELECTRIC LOVE)



அவள் Computer என்றால்
நான் Current


அவள் Monitor என்றால்
நான் Ammeter


அவள் Memory என்றால்
நான் Battery


அவள் Mouse என்றால்
நான் Bus


அவள் Keyboard என்றால்
நான் Circuit board


அவள் Modifier என்றால்
நான் Amplifier


அவள் Printer என்றால்
நான் Winder


அவள் Network என்றால்
நான் Elect Work


அவள் Internet என்றால்
நான்  Conductor


அவள் Interface என்றால்
நான் Inductor


அவள் Icon என்றால்
நான் Electron


அவள் E-Mail என்றால்
நான் EMF


அவள் Button என்றால்
நான் Switch


அவள் Shortcut என்றால்
நான் Short Circuit


அவள் Display என்றால்
நான் Discharge


அவள் Flowchart என்றால்
நான் Current Charge


அவள் Data என்றால்
நான் Diode


அவள் Pen drive என்றால்
நான் Electrical drive


அவள் Interrupter என்றால்
நான் Resister


அவள் Saver என்றால்
நான் Capacitor


அவள் Programmer என்றால்
நான் Transformer


அவள் CD என்றால்
நான் IC


அவள் Close என்றால்
நான் OFF-Because


அவள் I என்றால்
நான் She.




Sunday, July 13, 2014


                                    மழை காலம்..!


நீயும் நானும்
மழையில்
நனைந்து
ஈரமானோம்..!
மழை
நம்மில் நனைந்து

நெருப்பானது..!


 
பூமியை நெருங்கும்
மேகக் கயிறுகள்
அறுந்து விழுகின்றன
மழை துளியாய்...

உன்னை நெருங்கும்
என் கவிதை தூரல்கள்
செத்து விழுகின்றன
வெற்று வார்த்தைகளாய்..!









 நீ பிடித்த
குடையில் கருப்பாய் அழுகிறது
உன் மேல் விழாத மழை துளி..!





வா மழையே...
நீயும் நானும் சேர்ந்தே
அழலாம் அவள்
உன்னை மட்டுமல்ல
என்னை கண்டும்
ஒளிந்து கொள்கிறாள்..!




 
எப்பொழுதும் நீ
என் மனதில் இரு...
ஒவ்வொரு மழையின்
போது மட்டும்
என் அருகில் இரு..!





 
நாம்
நடந்து செல்லும்-இந்த
ஒற்றையடி பாதையில்
வேறென்ன வேண்டும் ...
மழையும் ஒரு
குடையும் தவிர..!





நான் மழையாக பெய்கிறேன்...
நீ குடையோடு நிற்கிறாய்...

என் சாரலே போதும்
என் குளுமையை உணர...

நீயோ உன் கண்களால்
எரிக்கிறாய் என் தூரல்களை..!

உன் வெப்பத்தை அணைக்கவே
நான் வருகிறேன்...

நீயோ  நடுங்கும்
உன் விரல்களை
குடைக்குள் மறைத்து
கொள்கிறாய்..!

என்னை என்று
உணர செய்வாய்
ஒவ்வொரு முறையும்
உன் வெப்பம் என் ஈரத்திடம்
தோற்றுப் போனதை..!